ருத்ரதாண்டவம் அடிய மேக்ஸ்வெல் - நெதர்லாந்திற்கு 400 ரன் இலக்கு!

கிளன் மேக்ஸ்வெல்
கிளன் மேக்ஸ்வெல்

நெதர்லாந்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் அந்த அணி வெற்றி பெற 400 ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணியின் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். வார்னர் 104 ரன்னும், ஸ்மித் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த லபுஷேன் அதிரடியாக விளையாடி 62 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது களத்தில் இருந்த மேக்ஸ்வெல் கடைசி 5 ஓவர்களில் சிக்ஸர் மழைகளை பொழிந்தார்.

இதனால், நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் ஸ்தம்பித்து போயினர். அவர் 8 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 106 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 50 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன் எடுத்தது. நெதர்லாந்து சார்பில் லோகன் வான் பீக் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 400 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்க உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in