குவியும் பாராட்டு... பலோன் டி'ஓர் விருதை 8வது முறையாக வென்ற கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி!

லயனல் மெஸ்ஸி
லயனல் மெஸ்ஸி

கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸ்ஸி பலோன் டி’ஓர் விருதை எட்டாவது முறையாக பெற்று அசத்தியுள்ளார்.

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை ஃபிஃபா ஆண்டுதோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வழங்கி வருகிறது. இந்த விருதானது 1956-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருதினை அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஏற்கெனவே 7 முறை பெற்றிருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருது 30 ஆண்கள், 30 பெண்கள் என 60  வீரர், வீராங்கனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவர்களில், நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி 8-வது முறையாக பலோன் டி'ஓர் விருதை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

கடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்த மெஸ்ஸி, தொடரில் ஏழு கோல்கள் அடித்துடன் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

முன்னதாக அதிகமுறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்ற சாதனையை படைத்திருந்த மெஸ்ஸி, தற்போது அதிகமுறை வென்றவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். விருத்துக்கான போட்டி பட்டியலில் எம்பாப்பே, எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

லயனல் மெஸ்ஸி
லயனல் மெஸ்ஸி

மெஸ்ஸி 2009-ல் தனது முதல் பலோன் டி'ஓர் விருதை வென்றார். அதைத் தொடர்ந்து 2010, 2011, 2012, 2015, 2019, 2021-ம் ஆண்டுகளில் வென்று அசத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த ஆண்டும் விருதை வென்று அசத்தியுள்ளார்.

அடானா பொன்மதி
அடானா பொன்மதி

பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருது மகளிர் உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனை அடானா பொன்மதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in