
நியூசிலாந்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் 22 பந்துகளில் அரை சதம் அடித்து இலங்கை வீரர் குஷால் பெரேரா சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கி இலங்கை அணி வீரர்கள், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி, ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆனால், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குஷால் பெரேரா அதிரடியாக ஆடி 22 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அதில் 2 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடக்கம். இதுவே நடப்பு உலகக் கோப்பை தொடரில் குறைவான பந்துகளில் அடிக்கப்பட்ட அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உலகக் கோப்பை தொடரில் 22 பந்துகளில் அரை சதம் அடித்த இரண்டாவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இவருக்கும் முன்னதாக தினேஷ் சந்திமால் இந்த சாதனையைப் படைத்திருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அந்த அணியின் ஏஞ்சிலோ மேத்யூஸ், ஸ்காட்லாந்திற்கு எதிரான போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் அடித்து குறைவான பந்துகளில் அரைசதத்தை கடந்த இலங்கை வீரர்களில் முதல் இடத்தையும், சர்வதேச அளவில் இரண்டாவது வீரராகவும் உள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!
ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!
மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!