கும்ப்ளேயின் சாதனையை முறியடித்தார் குல்தீப் யாதவ்! குவியும் வாழ்த்துகள்!

இலங்கைக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ்
இலங்கைக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் 4 ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்தியா இலங்கை போட்டி
இந்தியா இலங்கை போட்டி

இதில் முதல் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா, நேற்று இலங்கையை எதிர்கொண்டது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் ஷர்மா 53 ரன் எடுத்தார். இலங்கை தரப்பில் இளம் சுழற் பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளையும், சரித் அசாலங்கா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை தொடக்கம் முதலே சரிவை சந்தித்தது. அந்த அணி 41.3 ஓவரில் 172 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கைக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ்
இலங்கைக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ்

இதன் மூலம் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட், ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் குல்தீப் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அனில் கும்ப்ளேயின் சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார். அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் வரிசையில் கும்ப்ளேயை முறியடித்து சாதனைப் படைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in