சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முதலாக பந்து வீசிய தினேஷ் கார்த்திக்: எத்தனை ரன்கள் கொடுத்தார் தெரியுமா?

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முதலாக பந்து வீசிய தினேஷ் கார்த்திக்: எத்தனை ரன்கள் கொடுத்தார் தெரியுமா?

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், நேற்று ஆப்கானிஸ்தான் போட்டியின்போது சர்வதேச போட்டிகளில் முதன்முறையாக பந்துவீசினார்.

2004 ம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்காக தினேஷ் கார்த்திக் முதன்முதலில் விக்கெட் கீப்பராக களமிறங்கினார். அதன்பின்னர் தோனி கீப்பராக நிலைத்துவிட்டதால், அவ்வப்போது கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆடி வருகிறார். 37 வயதான அவர் தற்போதைய ஆசியக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்திருந்தார்.

நேற்றைய போட்டியில் 122 ரன்கள் விளாசிய விராட் கோலியின் ருத்ரதாண்டவத்தால் இந்திய அணி 212 ரன்களை குவித்தது. அடுத்ததாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியை ஆரம்பத்திலேயே புவனேஷ்குமார் சுருட்டினார். ஆப்கானிஸ்தானுக்கு 6 பந்துகளில் 120 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் 20வது ஓவரை வீச தினேஷ் கார்த்திக்கை அழைத்தார் இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்.

சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் தினேஷ் கார்த்திக் பந்து வீசுவது இதுவே முதல் முறையாகும். ஆஃப் ஸ்பின் பந்து வீசிய தினேஷ் கார்த்திக் தனது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று இரட்டை ரன்களை கொடுத்தார், ஓவரின் முடிவில் அவர் 18 ரன்கள் கொடுத்திருந்தார்.

ஆசியக் கோப்பையில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், மூன்று போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக் பேட்ஸ்மேனாக ஒரு பந்தை மட்டுமே எதிர்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார், ஆனால் பந்துவீச்சாளராக ஒரு முழுமையான ஓவரை வீசினார். கார்த்திக் பந்துவீசுவதை ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in