பரபரப்பு... காவிமயமாகிறது இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி!

இந்திய அணி காவி ஜெர்சி
இந்திய அணி காவி ஜெர்சி

இந்திய கிரிக்கெட் அணி என்றாலே நீல நிற ஜெர்சி தான் ஞாபகத்துக்கு வரும். அப்படி நீல நிறம் என்றாலே இந்திய கிரிக்கெட் அணி என்பது எழுதப்படாத விதி. தற்போது காவி நிற ஜெர்சியை வீரர்கள் அணிந்துள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் விளையாடி வரும் காலத்தில் இருந்தே நீல நிற ஜெர்சியை தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் அணிந்து வருகிறது. இந்த நிலையில் இதனை மாற்றும் முயற்சியில் தற்போது பிசிசிஐயின் தலைவர் ஜெய்ஷா ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இந்திய அணி ஜெர்சியில் காவி நிறத்தை புகுத்தி அதனை டிசைனாக மாற்றினார்கள். இதேபோன்று 2019ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜெர்சி முதல்முறையாக மாற்றப்பட்டது. அது உள்நாடு(home) மற்றும் வெளிநாடு(away) என இரு ஜெர்சிகள் பயன்படுத்தப்பட்டது. இதில் வெளிநாடு ஜெர்சிகள் இந்திய அணிக்கு காவி நிறமும் நீல நிறமும் கலந்த வகையில் வடிவம் மாற்றப்பட்டது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் எந்தவித வரவேற்பும் ஏற்படவில்லை. இதனை அடுத்து தற்போது ஐசிசி உலக கோப்பை 2023ம் ஆண்டுக்கான தொடரில் வீரர்கள் பயிற்சி செய்வதற்காக நீல நிறத்தில் ஒரு ஜெர்சி பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதனை திடீரென்று தற்போது முழுமையாக காவி நிறத்திற்கு பிசிசிஐ மாற்றி இருக்கிறது. இந்த புதிய காவி ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் இன்று பயிற்சி செய்வதற்காக சென்னை வந்தனர். இதை பார்த்ததுமே ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

இந்திய கிரிக்கெட் அணி என்றாலே நீலம் நிறம் தானே. அதை இப்படி காவி நிறத்துக்கு மாற்றி விட்டார்களே என்று ரசிகர்கள் புலம்ப தொடங்கினர். எனினும் இது பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் பிரத்தேயக ஜெர்சி என்று பிசிசிஐ தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது. மேலும் 2011ம் ஆண்டு உலக கோப்பையின் போது இதே போன்ற ஜெர்சியை தான் இந்திய வீரர்கள் பயன்படுத்தினார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் இது பார்ப்பதற்கே நல்லா இல்லை என்றும் பழையபடியே நீல நிற ஜெர்சிக்கு மாற்றுங்கள் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த காவிநிற ஜெர்சியை வைத்து பல்வேறு மீம்ஸ்களும் சமூக வலைத்தளத்தில் உலா வர தொடங்கி விட்டன.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in