இந்திய வீரர்களுக்கு சாதகமாக அகமதாபாத் ஆடுகளமா?- சர்ச்சை குறித்து என்ன சொல்கிறார் ஆஸி. கேப்டன்

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மிஸ்
ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மிஸ்

இந்திய அணிக்கு சாதகமாக ஆடுகளம் தயார் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 45 லீக் சுற்றுப் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நாளை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. லீக் சுற்று தொடங்கி, அரையிறுதி வரை ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோற்காமல் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதே நேரம், ஆஸ்திரேலியா இரண்டு போட்டிகளில் மட்டும் தோல்வியைச் சந்தித்து போராடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் தொடர் வெற்றியை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிலும், பிசிசிஐ இந்திய அணிக்கு சாதகமாக ஆடுகளத்தை தயார் செய்வதாகவும், கடைசி நேரத்தில் ஆடுகளத்தை மாற்றுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆடுகளம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் இரு அணிகளும் ஒரே ஆடுகளத்தில் தான் விளையாட உள்ளோம்.

அகமதாபாத் ஆடுகளம்
அகமதாபாத் ஆடுகளம்

சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நாங்களும் இங்கு நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதனால், ஆடுகளம் குறித்து எந்த கவலையும் இல்லை என்றார். மேலும், இந்தியாவிற்கு எதிராக ரசிகர்களின் பெரும் ஆதரவுக்கு இடையில் விளையாடியுள்ளோம். அது எங்களுக்கு புதிது அல்ல என்றார். 2015ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய 6 வீரர்கள் தற்போது அணியில் உள்ளார்கள். இறுதிப் போட்டிக்கான அனுபவம் அவர்களுக்கு உள்ளதால், பதற்றமின்றி, தைரியத்துடன் விளையாடுவோம் என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!

சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!

அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!

குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in