விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய அயர்லாந்து வீரர்... டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை!

பால் ஸ்டிரில்லிங்
பால் ஸ்டிரில்லிங்

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை சேர்ந்த வீரர் பால் ஸ்டிரில்லிங் புதிய சாதனையை படைத்துள்ளார். 400 பவுண்டரிகள் அடித்து இந்திய வீரர் விராட் கோலியை முந்தியுள்ளார்.

பால் ஸ்டிரில்லிங்
பால் ஸ்டிரில்லிங்

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றன. இந்த தொடர், யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்து வருகிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை அயர்லாந்து வென்றது. அடுத்து டி20 கிரிக்கெட் தொடர், தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 149 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான், ஆரம்பம் முதல் தடுமாறியது. தொடக்க வீரர்கள் முகமது இஷாக்(32), முகமது நபி(25) என அடுத்தடுத்து அவுட்டாகினர். அவர்களை தொடர்ந்து வந்தவர்களும் அயர்லாந்தில் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களே எடுத்து தோல்வி அடைந்தனர்.

பால் ஸ்டிரில்லிங்
பால் ஸ்டிரில்லிங்

இந்தப் போட்டியில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிரில்லிங் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது இந்த ஆட்டத்தில் 2 பவுண்டரிகள் அடித்தது மூலம் டி20 கிரிக்கெட்டில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையை அவர் படைத்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக பவுண்டரி அடித்த வீரர்களில் பால் ஸ்டிர்லிங் 400 பவுண்டரிகள் மூலம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அடுத்த இடத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம்(395), விராட் கோலி(361), ரோகித் சர்மா(359) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஒரு சிறிய நாடான அயர்லாந்து நாட்டில் இருந்து வந்த வீரர் ஒருவர், இந்த சாதனையை செய்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அமலுக்கு வந்தது தேர்தல் விதிமுறைகள்.. இனி இதையெல்லாம் செய்யக்கூடாது!

செல்லூர் ராஜூ செம தாக்கு... தமிழ்நாட்டுல இருக்கிற ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்!

குட் நியூஸ்... அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000!

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வேண்டும்... தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம்!

பெண்ணைக் கேலி செய்த வாலிபர் கோடாரியால் வெட்டிக் கொலை.. தாபாவில் பயங்கரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in