இன்று வெளியாகிறது ஐபிஎல் அட்டவணை... எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை

இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில், போட்டிக்கான கால அட்டவணை இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவை ஆண்டுதோறும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட் உலகில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்திய இந்த ஐபிஎல் தொடர், 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொடரில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும். இந்த அணிகள் பங்கேற்கும் போட்டிகள், இந்தியாவில் பெங்களூரு, டெல்லி, சென்னை, மும்பை, ஜெய்ப்பூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்.

அட்டவணை
அட்டவணை

இதுவரையில் ஐபிஎல் 16 சீசன் வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. ஐபிஎல் தொடரின் 17-வது சீசன், வரும் மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரின் அட்டவணை இன்று வெளியாக உள்ளது. முதற்கட்டமாக 15 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்படுகிறது. இதை எதிர்பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in