கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீபாவளி; சென்னையில் பைனல்... ஐபிஎல் 2024 முழு அட்டவணை வெளியீடு!

ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை அறிமுக நிகழ்ச்சி
ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை அறிமுக நிகழ்ச்சி

இந்த ஐபிஎல் சீசனில் மே 26-ம் தேதி சென்னையில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. தற்போது நடப்பு ஐபிஎல் சீசனுக்கான முழு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் சென்னையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தமுறை மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ளதால் பிசிசிஐ சார்பில் முதல் 21 போட்டிகளுக்கான கால அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டது. இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.மைதானத்தில் நடைபெற்றது. அந்த வகையில் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. தற்போது வரை நடந்து முடிந்த 5 லீக் போட்டிகளில் சி.எஸ்.கே, ஆர்.ஆர், பஞ்சாப், குஜராத் மற்றும் கே.கே.ஆர் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

முன்னதாக இதில் மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை முதற்கட்டமாக 21 போட்டிகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், தற்போது நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

சிஎஸ்கே அணி
சிஎஸ்கே அணி

ஐபிஎல் அட்டவணையின் இரண்டாம் பகுதி, பிளேஆஃப்கள் உட்பட 52 போட்டிகளை கொண்டுள்ளது. இதன்படி மே 21-ம் தேதி முதல் தகுதிச் சுற்று போட்டி மற்றும் மே 22-ஆம் தேதி எலிமினேட்டர் போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. மே 24-ம் தேதி இரண்டாவது தகுதிச் சுற்று போட்டி மற்றும் மே 26ம் தேதி இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறும் என புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த சீசனில் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in