உலகக் கோப்பை வில்வித்தை: வெள்ளி வென்றார் இந்தியாவின் பிரதமேஷ் ஜாவ்கர்! நூலிழையில் நழுவியது தங்கம்!

பிரதமேஷ் ஜாவ்கர்
பிரதமேஷ் ஜாவ்கர்

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆடவர்  காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் பிரதமேஷ் ஜாவ்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மெக்ஸிகோவின் ஹொமோசிலோ நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டி காம்பவுண்ட் பிரிவு இறுதிச் சுற்றில் டென்மார்க்கின் மத்தியாஸ் ஃபுல்லர்டனும், இந்தியாவின் பிரதமேஷும் மோதினர். 5 செட்களுக்கு பின்னர் இருவரும் 148-148 என சமமான புள்ளிகள் எடுத்ததால் டை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து  ஷூட் ஆஃப் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும்  இருவரும் தலா 10 புள்ளிகளைக் குவித்தனர். அதனால் வெற்றி, தோல்வி இல்லாத நிலையே தொடர்ந்தது.

எனினும் மையப்புள்ளிக்கு அருகில் மத்தியாஸின் ஷாட் இருந்ததால் அவர் தங்கம் வென்றதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

பிரதமேஷ் வெள்ளி வென்றார். காலிறுதியில் இத்தாலியின் பெக்காராவையும், அரையிறுதியில் நெதர்லாந்தின் மைக் ஸ்லோஸ்ஸரையும் வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார் பிரதமேஷ்.

மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வா்மா, வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in