அசத்தல்... கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி... உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய தஞ்சை தமிழர்!

கார்ல்சனுடன்  மோதிய கார்த்திகேயன் முரளி.
கார்ல்சனுடன் மோதிய கார்த்திகேயன் முரளி.

கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலகச் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இந்தியாவின் கார்த்திகேயன் முரளி சாதனை படைத்துள்ளார்.

கத்தாரில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய போட்டியில் 8வது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை, இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் முரளி எதிர்கொண்டார்.

முதலில் கார்ல்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், முக்கியமான தருணத்தில் ஒரு தவறிழைத்தார். இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கார்த்திகேயன் அடுத்தடுத்து சிறப்பான நகர்த்தல்கள் மூலம் போட்டியைத் தனதாக்கினார்.

இந்திய செஸ் வீரர் கார்த்திகேயன் முரளி
இந்திய செஸ் வீரர் கார்த்திகேயன் முரளி

இறுதியில் கருப்பு காய்களுடன் ஆட்டத்தைத் தொடங்கிய கார்த்திகேயன் வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் கார்ல்சனை வீழ்த்திய 3வது இந்தியர் என்ற பெருமையை கார்த்திகேயன் படைத்துள்ளார்.

முன்னதாக கார்ல்சனை, 14 வயதில் பென்டல ஹரிகிருஷ்ணன் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகிய இந்தியர்கள் மட்டுமே தோற்கடித்திருந்தனர். தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திகேயன், 2 முறை இந்திய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in