
நெதர்லாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கடைசி லீக் போட்டியில் இந்தியா 160 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன் எடுத்தது. இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 128 ரன்னும், கே.எல்.ராகுல்102 ரன்னும், ரோகித் ஷர்மா 61 ரன்னும் எடுத்தனர். விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் தலா 51 ரன் எடுத்தனர்.
411 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி 47.5 ஓவரில் 250 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி சார்பில் தேஜா அதிகபட்சமாக 54 ரன் எடுத்தார். இந்திய அணி சார்பில் பும்ரா, சிராஜ், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்தியா இதுவரை 9 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரில் வீழ்த்த முடியாத அணியாக உள்ளது. வரும் 15ம் தேதி நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளவிருக்கிறது.