அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி
அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

இன்று தென்னாப்பிரிக்க அணியுடன் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கடைசிப் பந்து வரை போராடி வீழ்ந்த இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

ஆட்டத்தின் போக்கு முதலில் இந்திய அணிக்கு சாதகமாகவே இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியாவின் சார்பில் அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 76 ரன்களும், கேப்டன் மிதாலி ராஜ் 68 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 48 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், 6 விக்கெட்களை இழந்து, 261 ரன்களை எடுத்திருந்தது. ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு 12 பந்துகளில் 14 ரன்கள் தேவையாக இருந்தது. கையில் நான்கு விக்கெட்டுகள் இருந்தன. இந்த பரபரப்பான நிலை தொடர்ந்து 2 பந்துகளில் 2 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது.

இது இரண்டு தரப்பு ரசிகர்களிடையிலும் மிகுந்த பதற்றத்தை உண்டாக்கியது. அதில் முதல் பந்தில் இஸ்மாயில் ஒரு ரன் எடுத்தார். அதனால் அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. டு ப்ரீஸ் அந்த கடைசி ரன்னை எடுத்தார். இதன்மூலம் இப்போட்டியில் வென்று தென்னாப்பிரிக்க அணியை அரை இறுதிக்குள் அழைத்துச் சென்றார்.

இதன் மூலம் இந்தியா உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறியது. அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.

Related Stories

No stories found.