இந்திய அணி சிறப்பாக விளையாட காரணம் இதுதான்… சொல்கிறார் முரளி விஜய்!

முரளி விஜய்
முரளி விஜய்

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலுமே சிறப்பாக ஆடி வரும் இந்தியா இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று, முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதிலும் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையை 302 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு பிரமிக்கத்தக்க அளவு இருந்தது. முகமது ஷமி, சிராஜ், பும்ரா என ஒவ்வொரு வீரரும் அவர்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய அணி
இந்திய அணி

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்பதை முன்னாள் வீரர் முரளி விஜய் பகிர்ந்துகொண்டுள்ளார். ``இந்திய வீரர்களுக்கு போட்டி குறித்த எந்த அழுத்தமும் இல்லை. அவர்கள் மிகவும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். மேலும் அணிக்குள் ஒவ்வொரு வீரர்களிடமும் நல்ல உறவும் ஒற்றுமையும் இருக்கிறது அதுவே வெற்றிக்கு முக்கிய காரணம்'' என முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்களுக்கு உற்சாகமூட்ட ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் அன்றைய போட்டியில் யார் சிறப்பாக பீல்டிங் செய்தார்கள் என்று, பீல்டிங் பயிற்சியாளர் மூலம் பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இப்படி அணி நிர்வாகமும் வீரர்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள பல்வேறு புதிய ஐடியாக்களை செயல்படுத்தி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in