உலகக்கோப்பை தொடரின் பேட்டிங், பவுலிங்கில் இந்திய வீரர்கள் முதலிடம் - அசத்தல் சாதனை!

உலகக்கோப்பை தொடரின் பேட்டிங், பவுலிங்கில் இந்திய வீரர்கள் முதலிடம் - அசத்தல் சாதனை!

உலகக் கோப்பை 2023ல் அதிக ரன்கள் அடித்த மற்றும் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, முகமது ஷமி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.

50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை முகமது ஷமி படைத்தார்.

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி 7 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம், உலகக் கோப்பை 2023ல் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா 9 போட்டிகளில் 22 விக்கெட்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், தில்சன் மதுஷங்க 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:

முகமது ஷமி(இந்தியா) - 6 போட்டிகளில் 23 விக்கெட்டுகள்

ஆடம் ஜம்பா (ஆஸ்திரேலியா) - 9 போட்டிகளில் 22 விக்கெட்டுகள்

தில்ஷான் மதுஷங்க (இலங்கை) - 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகள்

ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) - 10 போட்டிகளில் 18 விக்கெட்டுகள்

ஜெரால்ட் கோட்ஸி (தென்னாப்பிரிக்கா) 7 போட்டிகளில் 18 விக்கெட்டுகள்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 50வது ஒருநாள் சதத்தை விளாசிய இந்திய வீரர் விராட் கோலி, உலகக்கோப்பை 2023ல் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இப்போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் இரண்டாவது இடத்திலும், ரச்சின் ரவீந்திரா மற்றும் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:

விராட் கோலி (இந்தியா) - 10 போட்டிகளில் 711 ரன்கள்

குயின்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா) - 9 போட்டிகளில் 591 ரன்கள்

ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) - 10 போட்டிகளில் 578 ரன்கள்

டேரில் மிட்செல் (நியூசிலாந்து) - 10 போட்டிகளில் 552 ரன்கள்

ரோகித் சர்மா (இந்தியா) - 10 போட்டிகளில் 550 ரன்கள்

ஷ்ரேயாஸ் ஐயர் (இந்தியா) - 10 போட்டிகளில் 526 ரன்கள்

கடந்த ஒருநாள் உலகக் கோப்பைகளில் ஒரே தொடரில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறினார்.

விராட் கோலி (2023 ) - 711 ரன்கள்

சச்சின் டெண்டுல்கர் (2003) - 673 ரன்கள்

மேத்யூ ஹைடன் (2007) - 659 ரன்கள்

ரோஹித் ஷர்மா (2019) - 648 ரன்கள்

இன்று தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெறுவதால், அந்த அணியின் வீரர்கள் ஜொலித்தால் மேற்கண்ட பட்டியலில் சில மாற்றங்கள் வரவும் வாய்ப்புள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in