இந்திய மகளிர் ஹாக்கி அணி அபாரம்... சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை!

இந்திய ஹாக்கி அணி
இந்திய ஹாக்கி அணி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மகளிருக்கான 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை இந்திய படைத்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மகளிருக்கான 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. கடந்த 27ம் தேதி தொடங்கிய இந்த ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 5ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஹாக்கி தொடரில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, மலேசியா, தாய்லாந்து அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

இந்த நிலையில் தான் நேற்று நடந்த போட்டியில் இந்தியா மற்றும் சீனா அணிகள் மோதின. இதில், இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. இதில், இந்தியா சார்பில் தீபிகா, சலிமா டெடே ஆகியோர் கோல் அடித்தனர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்து நடக்க உள்ள போட்டியில் இந்தியா நடப்பு சாம்பியனான ஜப்பானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. இதே போன்று இன்று நடக்கும் மற்ற போட்டிகளில் தென் கொரியா – தாய்லாந்து மற்றும் மலேசியா – சீனா அணிகள் மோதுகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!

கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!

பாரில் நடனமாடிய பெண்களுடன் தகராறு... தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து... 'டெரர்' வாலிபரிடம் விசாரணை

சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!

அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in