நாங்க ரொம்ப நல்ல பிள்ளைங்க... திருப்பதியில் ரிஷப் பண்ட், அக்‌ஷர் படேல் தரிசனம்

திருப்பதியில் கிரிக்கெட் வீரர்கள் ரிஷப் பண்ட், அக்‌ஷர் படேல் தரிசனம
திருப்பதியில் கிரிக்கெட் வீரர்கள் ரிஷப் பண்ட், அக்‌ஷர் படேல் தரிசனம

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் அக்‌ஷர் படேல் இருவரும் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் அக்‌ஷர் படேல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் வேட்டி, சட்டை அணிந்து கொண்டு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.

திருப்பதியில் கிரிக்கெட் வீரர்கள் ரிஷப் பண்ட், அக்‌ஷர் படேல் தரிசனம
திருப்பதியில் கிரிக்கெட் வீரர்கள் ரிஷப் பண்ட், அக்‌ஷர் படேல் தரிசனம

கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் அதன் பிறகு நடந்த எந்த தொடரிலும் இடம் பெறவில்லை. தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து கடுமையான உடற்பயிற்சி மேகொண்டு வந்த அவர், விரைவில் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று ஆசிய கோப்பை போட்டியின் போது கையில் காயமடைந்த அக்‌ஷர் படேல் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த போதும், காயம் குணமடையாததால் இந்திய அணியிலிருந்து விலகினார்.

 ரிஷப் பண்ட், அக்‌ஷர் படேல் தரிசனம்
ரிஷப் பண்ட், அக்‌ஷர் படேல் தரிசனம்

இந்த நிலையில் இருவரும் வெள்ளை நிற வேட்டி, சட்டை அணிந்து கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். ரிஷப் பண்ட் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து கோயிலில் தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

2023 கிரிக்கெட் : சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள்... டாப் லிஸ்ட்டில் 3 இந்தியர்கள்!

நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!

கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!

மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!

அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in