தீபாவளியை ஒன்றாக கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணி! வைரலாகும் புகைப்படங்கள்

ஒன்றாக தீபாவளி கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
ஒன்றாக தீபாவளி கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் அணிந்து குடும்பத்தினருடன் இந்திய அணி வீரர்கள் ஒன்றாக கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு தரப்பினரும் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது மனைவி ரித்திகாவுடனும், விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடனும் இந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

மனைவி ரித்திகாவுடன் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா
மனைவி ரித்திகாவுடன் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் முகமது சமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோரும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ளனர். இதேபோல் சுப்மன் கில், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், இஷான் கிஷன், சூர்யகுமார், ஸ்ரேயஸ் ஆகியோரும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்று உள்ளனர். தற்போது இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், புள்ளி பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா

இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. மதியம் 2 மணி அளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி விளையாட்டு அரங்கில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் வென்று இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்கவைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து வருகிற 15 ஆம் தேதி நியூசிலாந்துடன் முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணி மோத உள்ளது. உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வருகிற நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in