இந்திய கேப்டன் விராட் கோலியா? ரோகித் சர்மாவா? - குழம்பிப்போன டேவிட் வார்னர்

இந்திய கேப்டன் விராட் கோலியா? ரோகித் சர்மாவா? - குழம்பிப்போன டேவிட் வார்னர்

இந்திய அணியின் கேப்டன் என விராட் கோலியை குறிக்கும் விதமாக ஆஸ்திரேலிய மாஸ்டர் பேட்ஸ்பேன் டேவிட் வார்னர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு பரபரப்பை உருவாக்கியது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து செயல்பட்டு வருகிறார்.

நேற்று நடந்த முதல் டி20 போட்டிக்கு முன்னதாக, 2019 தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் விராட் கோலி ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக்கொண்டிருக்கும் ஒரு சுவாரஸ்யமான படத்தை வார்னர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். ஆட்டத்தில் யார் வெல்வார்கள் என்ற கேள்வியை முன்வைத்து, தனது அணி வெற்றி பெறவேண்டும் எனவும் அவர் உற்சாகப்படுத்தினார்.

அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் "இன்றிரவு யார் வெற்றி பெறுவது?? கம் ஆன் ஆஸ்திரேலியா" என வார்னர் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த ஒரு இந்திய ரசிகர், டேவிட் வார்னரிடம், இது கோலி கேப்டனாக இருந்தபோது எடுத்த படம் என்பதை நினைவூட்டினார். மேலும் இந்த நேரத்தில் ரோகித் சர்மாதான் இந்திய கேப்டன் என்பதையும் முன்னிலைப்படுத்தினார். உடனடியாக, வார்னர் இது சமூக ஊடகங்களில் வைரலானதற்காக மன்னிப்புக் கேட்டார். "எனக்குத் தெரியும், மன்னிக்கவும்" என்று இந்திய ரசிகருக்கு வார்னர் பதிலளித்தார்.

மொகாலியில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியாவை வென்ற ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in