சீனாவில் அசத்தும் இந்திய பேட்மிண்டன் வீரர்கள்... 3 பதக்கங்கள் உறுதி!

ஆசிய இளையோர் பேட்மிண்டன் போட்டி
ஆசிய இளையோர் பேட்மிண்டன் போட்டி
Updated on
2 min read

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று பதக்கங்களை இந்திய வீரர்கள் உறுதி செய்துள்ளனர்.

சீனாவின் செங்டுவில் ஆசிய அளவிலான 17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. சிறுவர்களுக்கான 15 வயதுக்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியவின் ஜக்‌ஷேர் சிங் கங்குரா 21-14, 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் எம்ஏ சூ சுவானை 28 நிமிடங்களில் தோற்கடித்தார்.

அண்டர்15 ஒற்றையர் பிரிவில், கொரியாவின் பார்க் ஜங் பின்க்கு எதிரான போட்டியில் போர்னில் ஆகாஷ் சாங்மாய் 21-19, 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

17 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தன்வி ஷர்மா, சீன தைபேயின் லியாவோ ஜூய்-சியிடம் முதல் கேமில் தோல்வியடைந்து 20-22, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இரட்டையர் ஆட்டத்தில் தன்வி ரெட்டி அன்ட்லூரி-ரேஷிகா உதயசூரியன் ஜோடி 10-20, 20-22 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜோடியான ஃபூ சின் யி மற்றும் கின் ஷி யாங் ஜோடியை எதிர்கொண்டது.

பேட்மிண்டன் போட்டி
பேட்மிண்டன் போட்டி

ஜக்‌ஷேர் சிங் கங்குரா மற்றும் போர்னில் ஆகாஷ் சாங்மாய் ஆகியோர் சனிக்கிழமையன்று ஆண்கள் 15 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் அரையிறுதியில் ஒருவரையொருவர் எதிர்கொள்கிறார்கள். தன்வி ஷர்மா தனது 17 வயதுக்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் போட்டியின் இரண்டாம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் அன்யபத் பிச்சித் ப்ரீசாசக்கை எதிர்கொள்கிறார். இதனால் இந்திய வீரர்கள் 3 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.

பேட்மிண்டன்
பேட்மிண்டன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in