பழி தீர்த்தது இந்தியா... நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி!

இந்தியா வெற்றி
இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 95 ரன்களும், ரோகித் சர்மா 46 ரன்களும் எடுத்தனர்.

இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதலிடம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான போட்டியாக, இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை தோல்வியே கண்டிராத இரு அணிகளான இந்தியாவும், நியூசிலாந்தும் இன்று மோதின.

நடப்பு தொடரில் இதுவரை தலா நான்கு போட்டிகளிலும் இரு அணிகளும் ஒன்றில் கூட தோல்வியுறாமல் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன.

சம பலம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இரு அணிகளும் இன்று இமாச்சல் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் மற்றும் கில், நிதானமாக விளையாடி அணிக்கு நல்லதொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இதனையடுத்து, விராட்கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளார்கள்.

பனிமூட்டம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்திய அணி 48 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு ரன்கள் 274 எடுத்து வெற்றி பெற்றது.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in