இன்று 3வது டி20 போட்டி... தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள்
இந்தியா - மேற்கு இந்திய தீவுகள்

இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் 3வது டி20 கிரிக்கெட் போட்டி, புராவிடன்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.

மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை வென்ற நிலையில், தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஆனால், எதிர்பாரத வகையில் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அந்த அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், தொடரை தீர்மானிக்கும் 3வது போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் அந்த அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலும் மேற்கு இந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றி விடும் என்பதால், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணிக்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கில், சூரியகுமார், சாம்சன் ஆகியோர் கணிசமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இஷான், திலக் வர்மா, ஹர்திக் ஓரளவு தாக்குப்பிடித்தாலும், பெரிய ரன் அடித்தால் மட்டுமே மேற்கு இந்திய தீவுகள் அணியின் சவாலை சமாளிக்க முடியும். தொடரை கைப்பற்ற மேற்கு இந்திய தீவுகளும், வாய்ப்பை தக்கவைக்க இந்தியாவும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு குறைவிருக்காது என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in