முதலில் பேட் செய்கிறது இந்தியா - டாஸ் வென்றது இங்கிலாந்து!

முதலில் பேட் செய்கிறது இந்தியா - டாஸ் வென்றது இங்கிலாந்து!

இன்று நடைபெற்று வரும் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில், இன்று அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதனைத் தொடர்ந்து பேட் செய்ய தொடங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் இரண்டாவது ஓவரில் 5 ரன்னில் க்ரிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

இன்றையப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஏற்கெனவே நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி, நவம்பர் 13ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in