அஸ்வின் அரைசதம் - வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா!

அஸ்வின் அரைசதம் - வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா!

வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் ஆகியோரின் அரை சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஏற்கனவே வங்கதேச அணியிடம் ஒரு நாள் தொடரை இழந்துள்ளது. இந்த நிலையில் இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. சிட்டாகாங் மைதானத்தில் நேற்று காலை தொடங்கிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்கத்தில் நிதானமாக ஆடினர். ஆனாலும் கில் 20 பந்துகளில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து கே.எல் ராகுலும் 22 ரன்களில் ஆவுட்டானார். விராட் கோலியும் ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஓரளவு நிலைத்து ஆடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

குறைவான ஸ்கோருடன் இந்திய அணி தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் புஜாராவும் ஸ்ரேயாஸ் அய்யரும் ஜோடி போட்டு இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 90களில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்களுடன் களத்தில் இருந்தார், இந்திய அணி 278 ரன்களுடன் களத்தில் இருந்தது.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து அஸ்வின் ஓரளவு நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் குல்தீப் யாதவும் பொறுப்புடன் ஆடினார். அஸ்வின் 56 ரன்களையும், குல்தீப் 40 ரன்களையும் எடுத்தனர். இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 133.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து ஆடத் தொடங்கிய வங்கதேசம் அணி தொடக்கத்திலேயே சாண்டோ(0), யாசிர் அலி(4 ரன்கள்) என 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்களை எடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in