விராட் கோலி - கே.எல்.ராகுல் அதிரடி: வங்கதேச பந்துவீச்சை துவம்சம் செய்தது இந்தியா!

விராட் கோலி - கே.எல்.ராகுல் அதிரடி: வங்கதேச பந்துவீச்சை துவம்சம் செய்தது இந்தியா!

இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு இந்திய அணி 185 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

டி 20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியுடன் ஆடி வருகிறது. கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்ததால், இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு உள்ளது. எனவே இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது.

அடிலெய்டு மைதானத்தின் தொடங்கிய இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனாலும் மறுமுனையில் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடினார். அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் நிதானமாக ஆடினார். இதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்ட ராகுல் 32 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். அவரும் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாண்ட்யா 5 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 7 ரன்னிலும், அக்‌ஷர் படேல் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க மறுமுனையில் கோலி அரைசதத்தை கடந்தார். அவருடன் கைகோர்த்த அஷ்வின் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து தெறிக்கவிட்டார். ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கோலி 44 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியின் ஹசன் முகமது 3 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in