பேட்டிங்கில் பாடம் நடத்திய இந்தியா; நெதர்லாந்து கேப்டன் புகழாரம்!

நெதர்லாந்து கேட்பன் எட்வர்ட்ஸ்
நெதர்லாந்து கேட்பன் எட்வர்ட்ஸ்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குள் தகுதி சுற்று மூலம் நுழைந்தது நெதர்லாந்து அணி. தகுதிச்சுற்றில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை படுதோல்வியடைந்து, அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு கூட தகுதி பெறாமல் போனது. நெதர்லாந்தும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்றாலும், அந்த அணியின் போராட்ட குணம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த அணி பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளை அபாரமான முறையில் வீழ்த்தியது.

மேலும், ஒரு போட்டியில் வெற்றி பெற்று நெதர்லாந்து அரையிறுதி புள்ளிப்பட்டியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணியால் அதன் பிறகு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. ஆனாலும், நடப்பு உலகக் கோப்பை தொடரை சுவாரசியப்படுத்தியதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு அடுத்து நெதர்லாந்து அணிக்கு மிக முக்கிய இடம் இருக்கிறது. இரு அணிகளுமே புள்ளி மற்ற அணிகளுக்கு கடும் நெருக்கடியை அளித்தன.

நெதர்லாந்து அணி
நெதர்லாந்து அணி

இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 410 ரன் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 250 ரன்கள் மட்டுமே எடுத்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

போட்டிக்கு பிறகு பேசிய நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ், எங்கள் ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால், அதற்கு ஏற்ப நாங்கள் விளையாடி வெற்றி பெறவில்லை என்றார். மேலும், இந்திய அணி சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தியது. அதிலிருந்து எப்படி விளையாட வேண்டும் என்று நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in