கோலி, கில், ஸ்ரேயாஸ் அதிரடி... இந்தியா 357 ரன் குவிப்பு! கடின இலக்குடன் களமிறங்கும் இலங்கை

கில், கோலி
கில், கோலி
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அந்த அணி வெற்றி பெற 358 ரன்னை இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ரோகித் ஷர்மா இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து, களத்திற்கு வந்த விராட் கோலி, சுப்மன் கில்லுடன் இணைந்து இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார்.

கில் 92 ரன்னும், விராட் கோலி 88 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 82 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன் எடுத்தது. இலங்கை சார்பில் தில்ஷன் மதுஷங்கா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

358 ரன் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கி விளையாட உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in