20 வருஷ வலி... பழிதீர்க்குமா இந்தியா? நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை!

இந்தியா நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை
இந்தியா நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் ஆட்டத்தில், தர்மசாலாவில் நடைபெறும் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இன்று பல பரிட்சை நடத்துகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 21வது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை தொடர் வெற்றிகளை குவித்து வந்துள்ள இரு அணிகளும் இன்றைய போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதாலும் சூரியகுமார் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பதால் இந்திய அணி வலுவான நிலையில் இருந்து வருகிறது. காயத்திலிருந்து ஜடேஜா மீண்டுள்ள நிலையில் இன்றைய போட்டியில் முகமது சமி அல்லது அஸ்வின் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வலுவான நிலையில் இந்திய அணி
வலுவான நிலையில் இந்திய அணி

இருப்பினும் காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெற மாட்டார். இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இரு அணிகளும் முதல் முறையாக களமிறங்குவதால், இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக கடந்த 2003 ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில், நியூஸிலாந்து அணியை வென்றதில்லை. எனவே 20 ஆண்டுகளாக வெற்றி பெற முடியாத ஏக்கத்தை இன்று இந்திய அணி தீர்க்குமா என்கிற எதிர்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

நீயூசியை 20 ஆண்டுகளுக்கு பின்னர் வீழ்த்துமா இந்திய அணி
நீயூசியை 20 ஆண்டுகளுக்கு பின்னர் வீழ்த்துமா இந்திய அணி

நியூஸிலாந்து அணியும் பலமான அணியாக இந்த தொடரில் வலம் வருகிறது. குறிப்பாக அந்த அணியின் டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, பொறுப்பு கேப்டன் டாம் லாதம், பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனவே இந்த ஆட்டம் ரசிகர்கள் மறக்க முடியாத அளவிற்கு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in