இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது இந்தியா: அரையிறுதிச் சுற்றில் வாகைசூடப் போவது யார்?

இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது இந்தியா: அரையிறுதிச் சுற்றில் வாகைசூடப் போவது யார்?

அரையிறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா மோதவுள்ளது. இந்தப்போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிறத் தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவுபெற்றன. இதில் குரூப் 2 பிரிவில் 5 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் தோல்வியடைந்து 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் இவ்விரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஏற்கெனவே குரூப் 1 பிரிவில் இருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

அரையிறுதிப்போட்டியில் 4 அணிகள் நுழைந்துள்ள நிலையில், நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி வரும் 9ம் தேதி சிட்னி மைதானத்தில் எதிர்கொள்கிறது. அதேபோல இங்கிலாந்து அணியை இந்திய அணி வரும் 10ம் தேதி அடிலெய்டு மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்தப்போட்டியில் வெற்றி பெறும் அணிகள் நவம்பர் 13ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ளவுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in