சொன்னதைச் செய்யும் ஆஸ்திரேலியா அணி: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!

இந்தியா பேட்டிங்
இந்தியா பேட்டிங்

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். வழக்கம் போல் அதிரடி காட்டிய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்னுக்கு நடையைக் கட்டினார்.

தற்போது, விராட் கோலியும், கே.எல்.ராகுலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு பக்கம் ரன் ரேட் வேகமாக குறைந்து வருகிறது. போட்டிக்கு முன்னதாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், இறுதிப் போட்டியின் போது மைதானத்தில் உள்ள 1,30,000 ஆயிரம் இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதே முதல் இலக்கு என்று கூறினார்.

அதன்படியே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி மைதானத்தின் உற்சாகத்தை ஆஸ்திரேலிய வீரர்கள் குறைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in