இறுதிப்போட்டிக்கு நுழைய இந்தியாவுக்கு கடைசி வாய்ப்பு - பாகிஸ்தானை பந்தாடுமா ஆப்கானிஸ்தான்?

இறுதிப்போட்டிக்கு நுழைய இந்தியாவுக்கு கடைசி வாய்ப்பு - பாகிஸ்தானை பந்தாடுமா ஆப்கானிஸ்தான்?

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இந்தப்போட்டியை இந்திய ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

இன்று இரவு நடைபெறவுள்ள சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை வீழ்த்திய தெம்புடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. அந்த அணியில் முகமது ரிஸ்வான், பஹர் ஜமான், குஷ்தில் ஷா ஆகியோர் சிறப்பாக பேட் செய்து வருகின்றனர். பந்துவீச்சிலும் ஷதப் கான், முகமது நவாஸ், நசீம் ஷா உள்ளிட்டோர் கலக்கி வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் அணி பலத்துடன் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியும் ஆசியக்கோப்பையில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

பாகிஸ்தான், இலங்கை என இரு அணிகளிடமும் தோல்வியைத் தழுவிய இந்திய அணிக்கு இன்றைய போட்டியின் மூலம் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற சிறு வாய்ப்பு மட்டும் மிஞ்சம் உள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் வீழ்த்த வேண்டும். அதுபோல அடுத்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் இலங்கையிடம் தோற்க வேண்டும். அவ்வாறு நடந்தால் பாகிஸ்தானின் இறுதிச்சுற்று வாய்ப்பு பறிபோகும். அதே நேரத்தில் அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு நடந்தால் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றில் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் இருக்கும். இதில் இந்தியா ரன்ரேட் அடிப்படையில் அதிக புள்ளிகள் பெற்றால் இறுதிப்போட்டிக்கு நுழைய வாய்ப்புள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in