வானவேடிக்கை காட்டும் இந்திய அணி... தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சிறப்பான தொடக்கம்

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 37 ஆவது போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பேட்டிங் தேர்வு செய்துள்ள இந்திய அணி, ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில்லின் அதிரடியால் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 37-வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். இந்நிலையில் ரபாடா வீசிய பந்தில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்து தனது அரை சதத்தை தவறவிட்டார். 8 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

40 ரன்களில் ரோகித் அவுட்
40 ரன்களில் ரோகித் அவுட்

இதைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கியுள்ளார். இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடும் விராட் கோலி, இந்த போட்டியில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்திய அணியும், ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்துள்ள தென்னாபிரிக்க அணியும், புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க தங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே இன்றைய போட்டியில் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாதனை படைக்குமா இந்திய அணி?
சாதனை படைக்குமா இந்திய அணி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in