இந்தியாவுக்கு அரையிறுதியில் மீண்டும் கண்டம்... இறுதிப்போட்டியில் மோதப்போவது இவர்களா?

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று ஆஸ்திரேலியா அணி வென்றதால் உலகக்கோப்பை அரையிறுதி கணக்கு மொத்தமாக மாறி உள்ளது. இந்திய அணிக்கும் அரையிறுதியில் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

நேற்று ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடந்தது. இதில் முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் இப்ராஹிம் ஜத்ரான் 129 ரன்களை இவர் 143 பந்துகளில் எடுத்தார். கடைசியில் வந்த ரஷீத் கான் 18 பந்தில் 35 ரன்கள் எடுத்து அதிர வைத்தார். இதன் மூலம் 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 291-5 ரன்கள் எடுத்து.

கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களுக்கும் அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் மேக்ஸ்வெல் மட்டும் கடைசிவரை நின்று ஆடி 201 ரன்கள் எடுத்தார். 128 பந்தில் 21 பவுண்டரி , 10 சிக்ஸர் என்று இவர் ஆடிய ருத்ர தாண்டவம்தான் நேற்று ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தது.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களுக்கும் அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் மேக்ஸ்வெல் மட்டும் கடைசிவரை நின்று ஆடி 201 ரன்கள் எடுத்தார். 128 பந்தில் 21 பவுண்டரி , 10 சிக்ஸர் என்று இவர் ஆடிய ருத்ர தாண்டவம்தான் நேற்று ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தது.

ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றி அரையிறுதிக்கான வாய்ப்புகளை மாற்றி உள்ளது. தற்போது ஆப்கானிஸ்தான் அரையிறுதி ரேஸில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. அந்த அணிக்கு 14 சதவிகிதம் மட்டுமே செமி பைனல் சான்ஸ் உள்ளது. 40 சதவிகிதம் பாகிஸ்தான் அணிக்கும், 44 சதவிகிதம் நியூசிலாந்து அணிக்கும் செமி பைனல் சான்ஸ் உள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி
நியூசிலாந்து கிரிக்கெட் அணி

இந்த சூழலில் அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்வது உறுதியாகி உள்ளது. இதனால் இந்த இரண்டு அணிகளில் ஒன்றுதான் இறுதிப்போட்டிக்கு வரப்போகிறது .

இப்போது இந்திய அணிக்கு 2 சவால்களும், இரண்டு நல்ல செய்திகளும் காத்திருக்கிறது.

சவால் 1: புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியா 4ம் இடத்தில் உள்ள அணியை எதிர்கொள்ள வேண்டும். இதனால் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 2019ல் அரையிறுதியில் இந்தியா நியூஸிலாந்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. நன்றாக ஆடிய இந்தியா, தனது 3 மணி நேர மோசமான ஆட்டத்தால் தோல்வி அடைந்தது. அந்த கண்டம் மீண்டும் நம்மை தேடி வருகிறதோ என்ற அச்சம் இப்போது எழுந்துள்ளது.

சவால் 2: நாம் ஒருவேளை வென்று சென்றாலும்கூட சென்றாலும் கூட, அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்வது உறுதியாகி உள்ளது. எனவே இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா வந்தால் அதுவும் பெரிய கண்டம்தான். ஏனென்றால் பைனலில் ஆஸ்திரேலியாவை அடிப்பது என்பது மிக மிக கடினமான விஷயமாகும்.

சாதகம் 1: ஒருவேளை பாகிஸ்தான் அணி அரை இறுதிக்குள் நுழைந்தால், இந்தியா எளிதாக அவர்களை அடித்து பைனல் செல்ல முடியும். நடைபெறவுள்ள நியூசிலாந்து - பாகிஸ்தான் மேட்ச்தான் இதை உறுதி செய்யும்.

சாதகம் 2: அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்வது உறுதியாகி உள்ளது. அதில் ஒருவேளை தென்னாப்பிரிக்கா வென்று, அவர்கள் இறுதிப்போட்டிக்கு வந்தால், இந்தியா அவர்களை எளிதாக வெற்றிபெற முடியும் என்று கருதப்படுகிறது. இவைதான் தற்போதைய சூழலில் முக்கியமான கணிப்புகளாக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in