அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா: நெதர்லாந்து செய்த சிறப்பான சம்பவம்!

அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா: நெதர்லாந்து செய்த சிறப்பான சம்பவம்!

டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்றப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து அணி வீழ்த்தியதால், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 13 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து தோற்கடித்தது. இதன்காரணமாக டி20 உலகக் கோப்பைஅரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து 158 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

தற்போதைய சூழலில் குரூப் 2 பிரிவில் 4 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு +0.730 ரன்ரேட்டும் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் தலா 4 போட்டிகளில் ஆடி 4 புள்ளிகளுடன் உள்ளது. எனவே தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். தென்னாப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. ஏற்கெனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in