இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை! ரசிகர்கள் 2 பேர் தற்கொலை

இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை! ரசிகர்கள் 2 பேர் தற்கொலை

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்தது கோடிக்கணக்கான நாட்டு மக்களின் இதயங்களை உடைத்தது. இதனால் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர். இந்த நிலையில் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத 2 ரசிகர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் மற்றும் அரையிறுதி போட்டியில் அட்டகாசமாக விளையாடி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது. தோல்வியே தழுவாமல் இந்தியா விளையாடியதால் நிச்சயம் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மேற்கு வங்கம் பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மல்யுத்த வீரர் ராகுல் லோஹர் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா நிச்சயம் வெற்றிப்பெறும் என தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இந்தியா தோல்வியை தழுவியது அவரை நண்பர்கள் கிண்டலடித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல ஒடிசா மாநிலம் ஜெய்ஜ்பூர் பகுதியை சேர்ந்தவர் தேவ் ராஜன் தாஸ் (23). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகக்கோப்பை இறுதிப்போட்டியை டிவியில் பார்த்துள்ளார். இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த தேவ் ராஜன் தாஸ் இரவு வீட்டின் மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட தேவ் ராஜன் தாஸ் மனநல பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in