சூர்யகுமார் யாதவின் சூறாவளி ஆட்டம்: நிலைகுலைந்து தோற்றது நியூசிலாந்து!

சூர்யகுமார் யாதவின் சூறாவளி ஆட்டம்: நிலைகுலைந்து தோற்றது நியூசிலாந்து!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 6 ரன்னின் ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் பொறுப்புடன் ஆடினார். அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சினை நாலாபுறமும் தெறிக்கவிட்டார். கிஷன் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பாண்ட்யா தலா 13 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் டக் அவுட் ஆனார்கள். இறுதிவரை நிலைத்து நின்று ஆட்டமிழக்காமல் ஆடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 7 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 111 ரன்களை குவித்து அசத்தினார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் டிம் சவுதீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

192 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் புவனேஷ்குமார் பந்தில் டக் அவுட்டானார். மறுமுனையில் ஆடிய டெவன் கான்வே 25 ரன்னில் சுருண்டார். அதன்பின்னர் தீபக் ஹூடா பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. வில்லியம்சன் மட்டும் ஓரளவு நிலைத்து ஆடி 61 ரன்கள் குவித்து சிராஜ் பந்தில் போல்டானார். இதனால் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை மட்டுமே நியூசிலாந்து எடுத்தது. இந்தியா தரப்பில் ஹூடா 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சூறாவளி ஆட்டம் ஆடிய சூர்யகுமார் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in