முதன்முறையாக வென்ற தாமஸ் கோப்பை: முத்திரை பதித்த இந்தியா!

முதன்முறையாக வென்ற தாமஸ் கோப்பை: முத்திரை பதித்த இந்தியா!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த தாமஸ் கோப்பை பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்தோனேசிய அணியை வென்றதன் மூலம் முதன்முறையாக அக்கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது இந்திய ஆண்கள் அணி. 14 முறை தாமஸ் கோப்பையை வென்ற இந்தோனேசிய அணியை 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றதன் மூலம் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது இந்தியா.

இந்திய அணியின் லக்‌ஷ்யா சென், இந்தோனேசியாவின் ஆன்டனி சின்ஸுகா கிண்டிங்கை 8-21, 21-17, 21-16 எனும் செட் கணக்கில் வென்றார். இரண்டாவது போட்டியில் சாத்விக் - சிராக் ஜோடி இந்தோனேசியாவின் அஹ்சான் - சுகாமுல்ஜோ ஜோடியை 18-21, 23-21, 21-19 எனும் செட் கணக்கில் வென்றது.

மூன்றாவது ஆட்டத்தில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த் இந்தோனேசியாவின் ஜொனாதன் கிறிஸ்டியை 21-15, 23-21 எனும் நேர் செட் கணக்கில் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய பேட்மின்டன் அணி புதிய வரலாற்றை எழுதியிருப்பதாகப் பிரதமர் மோடி ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in