இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்று அபாரம்... விலகிய சீனியர்கள் - புதிய அத்தியாயம் எழுதிய ரோகித் ஷர்மாவின் இளம்படை!

ரோகித் ஷர்மா தலைமையிலான வீரர்கள்
ரோகித் ஷர்மா தலைமையிலான வீரர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. பெரிய அளவில் சீனியர்கள் இல்லாமல் ஜூனியர்களை வைத்தே இந்தியா வென்று இந்த சாதனையை படைத்துள்ளது.

அஸ்வின்
அஸ்வின்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், அடுத்து 2 போட்டிகளில் இந்தியாவும் வெற்றி பெற்று முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில், தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாவும், புதிய வெற்றி கணக்கை தொடங்கும் வெறியில் இங்கிலாந்தும் 4வது டெஸ்ட்டில் களமிறங்கின.

ராஞ்சியில் நடந்த இந்த டெஸ்டில், முதல் இன்னிங்ஸிஸ் இங்கிலாந்து 353 ரன்களும், இந்தியா 307 ரன்களும் எடுத்திருந்தன. இரண்டாவது இன்னிங்ஸிஸ் 145 ரன்களுக்குள் இங்கிலாந்து சுருண்டுவிட, இந்திய வீரர் சுப்மன் கில்லின் அபார ஆட்டத்தால் 192 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்டி இந்தியா வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் இப்போதே இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுவிட்டது. இந்த தொடரின் வெற்றியானது, இந்திய அணிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

 தருவ் ஜூரல்
தருவ் ஜூரல்

இந்த தொடரில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகியது, மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல், முகமது சமி ஆகியோர் காயம் காரணமாக வெளியேறினர். ஸ்ரேயாஸ் மோசமான ஃபார்ம் காரணமாக தொடரில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் ரிஷப் பண்ட், இஷான் கிஷன் ஆகியோர் இல்லாத நிலையில் கே.எஸ்.பரத் முதல் விக்கெட் கீப்பராக கொண்டுவரப்பட்டார். அவரும் பேட்டிங்கில் சொதப்பியதால், நீக்கப்பட்டார். இப்படி சீனியர் வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக போட்டியில் இல்லாத நிலையில், இந்த டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த வெற்றிக்கு ஜூனியர் வீரர்களும், அறிமுக வீரர்களுமே முக்கிய காரணம். ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், சர்பராஸ் கான், ஆகாஷ் தீப் போன்ற வீரர்கள், தங்களது திறமையை நிரூபித்து இந்தியாவிற்கு வெற்றி மகுடத்தை சூட்டியுள்ளனர். இந்தத் தொடரில் 655 ரன்கள் குவித்து ஜெய்ஸ்வால் சாதனை படைத்திருக்கிறார். அவர் அடுத்தடுத்து 2 இரட்டை சதங்கள் அடித்தது, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தது. துவக்கத்தில் தடுமாறினாலும் சுப்மன் கில் சதம் அடித்து கலக்கினார். விக்கெட் கீப்பராக துருவ் ஜூரல், 4வது டெஸ்டில் 90 ரன்கள் எடுத்தது வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

இதே போன்று, சர்பராஸ் கான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார். அஸ்வின் இல்லாத குறையை குல்தீப் யாதவ் போக்கினார். கடுமையான சூழலில் குல்தீப் யாதவ், விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றினார். ஜூனியர் வீரர்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை இந்தியா படைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in