பாரீஸ் ஒலிம்பிக் போட்டி... பேட்மிண்டனில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா பங்கேற்கிறார்!

அஸ்வினி பொன்னப்பா
அஸ்வினி பொன்னப்பா
Updated on
2 min read

பாரீஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு அஸ்வினி பொன்னப்பா, பி.வி.சிந்து உள்பட 7 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

பாரீஸில் ஒலிம்பிக் போட்டி 2024 தொடக்கவிழா ஜூலை 26-ம் தேதி இரவு 7.30 மணிக்கு செய்ன் நதிக்கரையோரம் மாபெரும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் மைதானத்திற்கு வெளியே தொடக்க விழா நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி 2024
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி 2024

இந்த தொடக்க விழாவில் 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், பாரீஸில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் படகுகளில் அணிவகுத்து வந்து பங்கேற்கிறார்கள். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது பாரீஸ் நடத்தும் மூன்றாவது ஒலிம்பிக் போட்டியாகும்.

ஏற்கெனவே 1900 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதற்குப் பிறகு தற்போது பாரீஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் 32 விளையாட்டுகளும் 329 நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சர்வதேச பேட்மிண்டன் வீரர்கள் பங்கேற்பை உறுதி செய்யும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். ஒலிம்பிக் தகுதித் தரவரிசைப்படி ஒற்றையர் பிரிவில் முதல் 16 வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

பி.வி.சிந்து
பி.வி.சிந்து

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 12வது இடத்திலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரனாய் மற்றும் லக்ஷ்யா சென் 13வது இடத்திலும் உள்ளனர். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு இம்முறையும் பதக்கம் வழங்கப்பட்டாலும், கடந்த ஓராண்டாக சிந்து எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

ஆடவர் இரட்டையர் பிரிவில், சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி ஏற்கெனவே பல போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தந்துள்ளனர். இதனால் இந்த ஜோடி மீது இந்தியா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி பங்கேற்கிறது.

அஸ்வினி பொன்னப்பா
அஸ்வினி பொன்னப்பா

இருப்பினும், இந்தியாவின் மற்ற மகளிர் இரட்டையர் ஜோடியான திரிசா ஜோலி-காயத்ரி கோபிசந்த் தகுதி பெறவில்லை.

அஸ்வினி பொன்னப்பா
அஸ்வினி பொன்னப்பா

இந்தியாவின் சார்பில் பிவி.சிந்து, லக்ஷ்யா சென், எச்.எஸ்.பிரனாய், சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, அஸ்வினி பொன்னப்பா, தனிஷா க்ராஸ்டோ ஆகிய 7 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!

தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!

கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in