பும்ரா அசத்தல்; தென் ஆப்பிரிக்கா 210 ரன்னுக்கு அவுட்

விறுவிறுப்பில் 3-வது டெஸ்ட் போட்டி
பும்ரா
பும்ராதி இந்து

கேப்டவுன் மைதானத்தில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் பும்ராவின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 70 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இருக்கும் நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 223 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 79, புஜாரா 43 ரன்கள் அடித்தனர். தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் ரபாடா 4 விக்கெட்டுகளும், ஜேன்சன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பும்ரா- முகமது சமி
பும்ரா- முகமது சமிதி இந்து

இதைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது. அணியின் தொடக்க வீரர்கள் எல்கார் 3, மார்க்ரம் 8 ரன்களில் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்தவர்களில், அதிகபட்சமாக பீட்டர்சன் 72 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பும்ராவின் வேகப் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அசத்தலாகப் பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ், முகமது சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் 13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அகர்வால் 7, கே.எல்.ராகுல் 10 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் புஜாரா - கோலி இணை களமிறங்கி விளையாடியது. புஜாரா 9, கோலி 14 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்து 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடர்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in