
தேசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கப் பட்டியலில் 8 தங்கம் உள்பட 29 பதக்கங்களுடன் 6-ம் இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது.
37வது தேசிய விளையாட்டுப் போட்டியை கடந்த அக்.27-ம் தேதி கோவாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பளு தூக்குதல், வாள் வீச்சில் தலா 8 தங்கமும், 10, வெள்ளியும், 11 வெண்கலப் பதக்கங்களும் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளன. இதன் மூலம் பதக்கப் பட்டியலில் 6வது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது.
பதக்கப்பட்டியலில் மகாராஷ்டிரா 123 பதக்கங்களுடன் முன்னணியில் உள்ளது. 52 தங்கம், 35 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களை மகாராஷ்டிரா வென்றுள்ளது. ஹரியாணா(50), சர்வீசஸ் அணி(36) முறையே இரண்டு, மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.