விறுவிறுப்பான ஆட்டம்!- உலக கோப்பை இறுதிக்கு செல்லுமா இந்திய ஜூனியர் அணி?

இந்திய ஜூனியர் அணி
இந்திய ஜூனியர் அணிhindu

19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. 2 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 48 ரன்கள் எடுத்துள்ளது. விறுவிறுப்புடன் ஆட்டம் நடந்து வருவதால் எந்த அணி இறுதிக்குள் நுழையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் இன்று நடைபெற்று வரும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான இந்திய அணி, 3 தடவை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக அக்ரிஷ் ராகுவன்சியும், ஹார்னோர் சிங்கும் களமிறங்கினர்.

இந்திய அணி 16 ரன் எடுத்திருந்தபோது முதல் விக்கெட்டை இழந்தது. அக்ரிஷ் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து, சேக் ரஷீத் களமிறங்கினார். இவர் சிங்குடன் ஜோடி சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சிங் 16 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து, சேக்குடன் யாஷ் துல் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

முன்னதாக, இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா அணிகளை அடுத்தடுத்து பந்தாடி கால்இறுதிக்குள் நுழைந்தது. கால்இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அரைஇறுதிக்குள் நுழைந்தது.

3 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி லீக் ஆட்டங்களில் 2 வெற்றியும் (வெஸ்ட்இண்டீஸ், ஸ்காட்லாந்துக்கு எதிராக), ஒரு தோல்வியும் (இலங்கையிடம்) கண்டு கால்இறுதியை எட்டியது. கால்இறுதியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in