இன்று தொடங்குகிறது உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் திருவிழா: 16 அணிகள் பலப்பரீட்சை

இன்று தொடங்குகிறது உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் திருவிழா: 16 அணிகள் பலப்பரீட்சை

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்தப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

தற்போது அனைவரின் விருப்பமாகவும் மாறியுள்ள 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் போட்டிகளின் உலகக்கோப்பை 2007ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் 8 வது டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்தில் சூப்பர் 12 சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் ஏற்கெனவே தகுதிப் பெற்றுள்ளன.

இந்தப் போட்டியில் லீக் சுற்றில் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரசு அமீரகம், நமீபியா ஆகிய அணிகள் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே,அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதிபெறும்.

இன்று தொடங்கவுள்ள உலகக்கோப்பை போட்டியில் லீக் சுற்றில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கும் உலகக்கோப்பை டி20 போட்டிகள் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in