இந்திய அணிக்கு மட்டும் சிறப்பு பந்து… முன்னாள் பாகிஸ்தான் வீரரின் விசித்திர கருத்து!

முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா
முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா

நடப்பு உலகக் கோப்பை தொடரில் மற்ற எந்த அணி பந்து வீச்சாளர்களைவிடவும், இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதிலும் பும்ரா, முகமது ஷமி, சிராஜ், குல்தீப் என அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தி, எதிர் அணியினரை திணறடித்து வருகின்றனர்.

இலங்கை அணி
இலங்கை அணி

அதிலும் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாத இலங்கை அணி 55 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

ஷமி, சிராஜ், பும்ரா
ஷமி, சிராஜ், பும்ரா

இந்நிலையில், பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹசன் ராசா விசித்திரமான கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது ஐசிசி, பிசிசிஐ இணைந்து இந்திய வீரர்களுக்கு சிறப்பு பந்துகளை வழங்குவதாகவும், அதன் காரணமாகவே இந்திய பந்து வீச்சாளர்களால் சிறப்பாக பந்துவீச முடிவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மற்ற வீரர்களைக் காட்டிலும் சிறப்பான ஸ்விங் மற்றும் சீம் ஆவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அவர், இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும் பந்தை ஒருமுறை சோதனை செய்ய வேண்டும். ஏனெனில் டேப் சுற்றப்பட்ட பந்து கூட அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்றார். இந்த கருத்துக்களை வைத்து கிரிக்கெட் ரசிகர்களும், பல கிரிக்கெட் விமர்சகர்களும் ஹசன் ராசாவை கலாய்த்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in