
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் ஜட்ரானின் அசத்தல் சதத்தால், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 292 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 39 வது ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொள்ள இந்த போட்டி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதையடுத்து டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஒருபுறம் இரட்டை இலக்க எண்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்த போதும், மறுமுனையில் இப்ராஹிம் ஜட்ரான் நிலைத்து நின்று ஆடி ரன்களைச் சேகரித்தார்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜட்ரான், இறுதிவரை ஆட்டமிழக்காமல், 143 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 129 ரன்களை குவித்தார். இறுதி நேரத்தில் ஜட்ரானுடன் இணைந்த ரஷீத் கான், தன் பங்குக்கு மூன்று சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 35 ரன்கள் சேகரித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி குவித்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில், சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை இப்ராஹிம் ஜட்ரான் இதன் மூலம் படைத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசல்வுட் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்