இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா
இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா

தோல்வியே இல்லாமல் விளையாடியது எப்படி?- கேப்டன் ரோகித் சர்மா சொன்ன அசத்தல் பதில்!

’’ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே இலக்காக வைத்துக் கொண்டோம். ஒருபோதும், ஒட்டுமொத்த போட்டியையும் நினைத்து விளையாடவில்லை. அணியில் எல்லோரும் அப்படியே செய்தார்கள்’’ என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில், 9 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 9 போட்டிகளிலும் அசத்தல் வெற்றியை பெற்று சாதனை புரிந்துள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியை தழுவாத அணியாக அரையிறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது.

இந்திய அணி
இந்திய அணி

நேற்றைய வெற்றிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ‘’இத்தொடர் தொடங்கியதில் இருந்து எங்களைப் பொறுத்தவரை, ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே இலக்காக வைத்துக்கொண்டோம்.

ஒருபோதும், ஒட்டுமொத்த போட்டியையும் நினைத்து விளையாடவில்லை. அணியில் எல்லோரும் அப்படியே செய்தார்கள். ஏனென்றால், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சூழ்நிலைகளில் விளையாடுவதால், அதற்கேற்ப மாற்றி விளையாட வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்தோம். இந்த ஒன்பது ஆட்டங்களிலும் நாங்கள் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல் போட்டியில் இருந்து இப்போது வரை யாரேனும் ஒருவர் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தனிப்பட்ட ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து அணிக்கான வேலையைச் செய்ய விரும்புவது அணிக்கான ஒரு நல்ல அறிகுறி. ஆம், இந்தியாவின் கண்டிஷன்கள் எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

இங்கு மற்ற அணிகளை விட நாங்கள் அதிகமாக விளையாடியுள்ளோம். உண்மைதான். ஆனால், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அணிகளை எதிர்த்து வெவ்வேறு சூழ்நிலைகளில் விளையாடுவது என்பது சவால் நிறைந்தது. அதற்கேற்பவும் எங்களை தயார்படுத்திக் கொண்டோம்.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

இத்தொடரில் முதல் நான்கு போட்டிகள் முதலில் சேசிங் செய்தோம். மற்ற போட்டிகளில் முதலில் பேட்டிங். இரண்டிலும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன்களை சேகரித்ததால், ஸ்பின்னர்களுடன் சேர்ந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அணியின் வெற்றியைக் கவனித்துக்கொண்டனர்.

டிரஸ்ஸிங் அறை சூழலை கலகலப்பாக வைத்திருக்க போட்டியின் முடிவுகள் முக்கியம். நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நமது கையில் என்ன உள்ளதோ அதில் மட்டுமே கவனம் செலுத்தினோம்.

ஐந்து பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, அதற்கேற்ப ஆப்ஷன்களை அணிக்குள் உருவாக்க வேண்டும். இன்றைய போட்டியில் மட்டுமே 9 பவுலர்களை முயற்சித்தோம். பவுலிங் யூனிட்டில் வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சி செய்து, எங்களால் என்ன சாதிக்க முடியும் என்பதைப் பார்க்க விரும்பியதால் அப்படி செய்தோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in