டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா வரலாற்று சாதனை

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா வரலாற்று சாதனை

பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பையை இந்திய அணி 3வது முறையாக வென்றுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்று(டிச.17), இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதின. முதலில் பேட் பிடித்த இந்தியா 20 ஓவர்களில் 277 ரன்கள் குவித்தது. அடுத்து பேட் பிடித்த பங்களாதேஷ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்களுடன் தோல்வியடைந்தது. இவ்வகையில் இந்தியா 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் பார்வையற்றோர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. முன்னதாக 2012 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளின், பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது.

2022 பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in