உலகக்கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்: பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு!

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

காயம் காரணமாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அனைத்து வீரர்களும் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது சிறப்பான ஆட்டத்தை உலக்கோப்பை தொடரில் வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில், வங்கதேசத்துடன் நடைபெற்ற போட்டியின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா, ஆட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார்.

ஆட்டத்தின் 9வது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா 3வது பந்தை லிட்டன் தாஸுக்கு வீசினார். அதனை தாஸ் நேராக அடித்தார். அந்த பந்தை பாண்டியா தனது காலால் தடுக்க முயன்றார். பந்து வேகமாக பட்டதால் அவரால் நடக்க முடியாமல் போனது.

வெளியேறும் ஹர்திக் பாண்டியா
வெளியேறும் ஹர்திக் பாண்டியா

இதையடுத்து, அவருக்கு அணியின் பிசியோதெரபிஸ்ட் உடனடியாக சிகிச்சை அளித்தனர். ஆனால், அவருக்கு கால் வலி குறையாததால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. பின்னர் பாண்டியா தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்.

ஆனால் இப்போதும் அவர் காயத்தில் இருந்து மீளாததால் நடப்பு உலகக்கோப்பை தொடரில் மீதமுள்ள போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என ஐசிசி அறிவித்துள்ளது.

பிரசித் கிருஷ்ணா
பிரசித் கிருஷ்ணா

அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in