ஆட்டத்தின் பாதியில் வெளியேறிய ஹர்திக் பாண்டியா; மருத்துவமனையில் சோதனை

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

இந்தியா - வங்கதேசம் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 27 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன் எடுத்துள்ளது. இந்நிலையில், ஆட்டத்தின் 9வது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா 3வது பந்தை லிட்டன் தாஸுக்கு வீசினார். அதனை தாஸ் நேராக அடித்தார். அந்த பந்தை பாண்டியா தனது காலால் தடுக்க முயன்றார். பந்து வேகமாக பட்டதால் அவரால் நடக்க முடியாமல் போனது.

ஹர்திக் பாண்டியா காயம்
ஹர்திக் பாண்டியா காயம்

இதையடுத்து, அவருக்கு அணியின் பிசியோதெரபிஸ்ட் உடனடியாக சிகிச்சை அளித்தனர். ஆனால், அவருக்கு கால் வலி குறையாததால் ஆட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். இந்நிலையில், அவர் பீல்டிங் செய்ய மாட்டார் என்றும், ஆனால் பேட்டிங் செய்ய களத்திற்கு வருவார் என்றும் அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது காலின் காயம் குறித்து அறிய மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in